• Dec 26 2024

என்னை கலாய்க்கிற ஒரே ஒரு ஹீரோயின் அவங்க மட்டும் தான்! ஜெயம் ரவி சொன்ன சீக்ரெட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவர் தற்போது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தீராத மன அழுத்தத்தில் இருந்து வருகின்றார். எனினும் தற்போது அதை எல்லாவற்றையும் ஒதுக்கி தனது கேரியரில் முக்கிய கவனத்தை செலுத்தி வருகின்றார்.

ஜெயம் ரவி தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதன் பின்பு பல சர்ச்சைகள் தோன்றியபோதும் அவற்றை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு மும்பையில் தனது கேரியருக்காக வசித்து வருகின்றார்.

ஜெயம் ரவி மும்பை வந்ததை அறிந்தவர்கள் அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியதாக பல சர்ச்சை கருத்துக்களை பரப்பினார்கள். ஆனாலும் அவர் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள பட வாய்ப்புகளுக்கு ஆகவும், தனது ஆபிஸை அங்கேயே அமைத்துக் கொள்வதற்காகவும் தான் மும்பையில் செட்டில் ஆனார் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஜெயம் ரவி வழங்கிய பேட்டி ஒன்றில் ஹன்சிகாவுடன் உள்ள நட்பு பற்றி மிகவும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், ஹன்சிகா கூட மூன்று படங்களில் நடித்திருக்கிறேன். அவங்க என்னைய பார்த்து படத்துல ஒரு டயலாக் சொல்லுவாங்க. உன் முகத்தை இடது பக்கம் பார்த்தால் ரொமான்ஸ் முகம்... வலது பக்கம் பார்த்தால் ஆக்சன் முகம்னு.. டயலாக் பேசிருப்பார்கள் அந்த டயலாக்கை எடுத்து முடித்ததும் அவங்க சொன்ன இன்னொரு விஷயம் உன் முகத்தை ஸ்ட்ரைட்டா பார்த்தால் காமெடி முகம் என்று சொன்னார். இப்படி என்னை கலாய்க்கக்கூடிய ஒரே ஒரு ஹீரோயின் அவங்க தான் என்று ஜெயம் ரவி பேட்டி கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement