விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பாடும் திறனை உலகுக்கு அறிமுகம் செய்தவர் தான் ஷிவாங்கி இசை குடும்பத்தில் பிறந்த இவர் கோமாளி தனமான செயற்பாட்டினால் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சீசனில் கோமாளியாக அசத்தினார். அடுத்த சீசன் ஒன்றில் குக் ஆக சூப்பராக சமைத்து கலக்கினார்.
பெரும்பாலான மேடைகளில் ஸ்ரேயா கோஷல் தான் தனது ரோல் மாடல் என கூறி வருபவர் அவருக்கு ஒரு படி மேலான திறமைகளை வைத்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் வித்யாசேகர் மகனுடன் காதல் கொண்டதாக பேசப்பட்டது. மற்றும் அஷ்வின் சிவாங்கி ஜோடியும் அனைவராலும் கிசு கிசுக்கப்பட்ட ஒரு செய்தியாக இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஷிவாங்கி தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். குறித்த நேர்காணல் ஒன்றில் அவர் "அழகான பசங்கள நமக்கு புடிக்கும் ஆனா அவங்களுக்கும் நம்மள புடிக்கணுமே. நானும் காதலில் இருந்தேன், ஆனா பிரேக் அப் ஆகிடிச்சி. அந்த பிரேக்கப் எனக்கு மிகப்பெரிய மன பலத்தை கொடுத்தது. அதனால் தான் என்னைய நானே அழகுபடுத்த ஆரம்பிச்சேன். பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணா அந்த லவ் நிலைக்காதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்" என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.
Listen News!