• Dec 25 2024

விஜய்யின் ரூட்டை பாலோ பண்ணும் சூர்யா- இது தான் விஷயமா?- இதுவும் நல்லாத் தான் இருக்கும்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தின் பூஜை வீடியோ அண்மையில் தான் வெளியாகியிருந்தது. அத்தோடு இந்தப் படத்தின் ஷுட்டிங்கும் விரைவாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் விஜய் சில காட்சிகளில் 19 வயது மாணவராக நடிக்கிறார் என்றும், அதற்காக பாடி ஸ்கேனிங் உள்ளிட்ட விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது என்றும் தகவல் முன்பு வெளியானது.


இந்நிலையில் சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் சூர்யா 43 படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்த வருட தொடக்கத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதால் சூர்யா தனது உடலை கல்லூரி மாணவரை போல மற்ற தீவிர பயிற்சியில் இருக்கிறார் என தெரிகிறது.விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் இப்ப்டி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


Advertisement

Advertisement