• Dec 27 2024

கங்கனாவை அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு இடமாற்றம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

நடிகையும் பாஜக கட்சியின் எம்பியும்னா கங்கனா ரனாவத் தமிழ் மக்களுக்கு "சந்திரமுகி 2" திரைப்படத்தின் மூலம் பரீட்ச்யமானார்.கடந்த மாதம் வெளியான செய்திகளில் இவரது புகார் பெரும் பேசுபொருளானது.அதாவது கடந்த மாதம் 6ஆம் தேதி சண்டீகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன்னை அறைந்ததாக புகார் தெரிவித்திருந்தார் கங்கனா ரனாவத்.

Kangana Ranaut airport incident: Farmer ...

குறித்த புகார்  குறித்து அவர் வீடியோ வைரலானதுடன் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இது தொடர்பான விசாரணையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தரக்குறைவாக பேசியிருந்தார் என்றும் அது குறித்து  கங்கனா மேல் கோபமாய் இருந்த குல்விந்தர் அவருக்கு அறைந்ததாவும் தெரியவந்தது.

Kangana Ranaut slap controversy ...

கங்கனாவை அறைந்ததற்காக பணியிடை நீக்கம் பெற்று இருந்த குல்விந்தர் கவுர் தற்போது சண்டீகரில் இருந்து பெங்களூருக்கு பணியிடமாற்றம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மேலும் இது குறித்தான விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement