தமிழ் சினிமாவில் தற்போது வளரும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் துஷாரா விஜயன். 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் ரசிகர்களை முதல் முறையாக கவர்ந்த இவர், அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகிறார்.
புதிதாக வெளியான 'ராயன்' படத்தில், தனுஷ் இயக்கத்தில் அவருடைய தங்கையாக நடித்த துஷாரா, தனது நேர்த்தியான நடிப்பால் மீண்டும் பாராட்டைப் பெற்றார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது கூடுதலான பெருமை.
இந்நிலையில், தற்போது விக்ரம் ஜோடியாக 'வீர தீர சூரன்' படத்திலும் நடித்து வரும் துஷாரா விஜயன், சமீபத்தில் கூறிய ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “இவங்க சொல்றாங்க, அவங்க சொல்றாங்கன்னு நாம நம்ம எண்ணங்களை மாற்றிக் கொள்ளக் கூடாது. யார் என்ன வேணா பேசிக்கோங்க. நான் இதுதான் பண்ணுவேன், என்று சாதிச்சுட்டு போயிட்டே இருக்கணும்,” என துஷாரா தன்னம்பிக்கையோடு கூறியுள்ளார்.
இந்நிலையில், துஷாரா விஜயன் தொடர்ந்து தனக்கென தனி இடம் பிடிக்க வெகுவாக உழைத்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. தமிழ் சினிமாவின் எதிர்காலத்தில் முக்கிய நடிகையாக திகழவுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.
Listen News!