• Oct 26 2024

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஜாக்குலின்? குக்கா? கோமாளியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில்குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஏகப்பட்ட நெகட்டிவ் இமேஜ் தங்கள் மீது ஏற்படுகிறது என்றும், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் முழுக்க முழுக்க பாசிட்டிவ் இமேஜ் ஏற்படுகிறது என்றும் பலரும் நினைக்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது நல்ல நிலையில் வாய்ப்புகள் பெற்று இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தான் சரியானது என்றும் பலர் இதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில்கலக்கப்போவது யாருநிகழ்ச்சியில் ரக்சன் உடன் இணைந்து தொகுப்பாளினியாக ஆக இருந்த ஜாக்லின் அதன் பின்னர்தேன்மொழிசீரியலில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு வேறு சீரியல் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில்குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஆடிஷனுக்கு சென்று வந்ததாகவும் அவர்குக் வித் கோமாளிசீசன் 5 நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் குக்கா? அல்லது கோமாளியா? என்று அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கேட்ட கேள்விக்கு தான் பதில் இல்லை. ஆனால் கண்டிப்பாக ஜாக்குலின் ஒரு குக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் கோமாளியாக கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்குக் வித் கோமாளிநிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தயாராகிவிட்டதாகவும் மே முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement