• Dec 26 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் யாருக்கு வாழ்த்து சொல்றார் விஜய்? 2026ல் இருக்குது பிரச்சனை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் எதிர்க்கட்சி கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஒரு கட்சியின் கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெற்று இருக்கும் சாதனையை செய்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தமிழக அரசியல் தலைவர்களும் அகில இந்திய அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லாமல் அண்டை மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். ஆந்திர மாநிலம் ஒரு நல்ல தலைவரை பெற்று உள்ளது என்றும் அவரது தலைமையில் ஆந்திர மாநிலத்தில் நல்லாட்சி நடக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் ஒரு அருமையான கூட்டணியை அமைத்து அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது என்பது மட்டுமின்றி 2026 இல் திமுகவுக்கு எதிராகத்தான் விஜய் களமிறங்க போகிறார் என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Advertisement

Advertisement