• Dec 26 2024

முதல் விமர்சனமே செம்ம பாசிட்டிவ்.. அப்ப ‘ரத்னம்’ படமும் ரூ.100 கோடி வசூலிக்குமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஷால் நடித்த ‘ரத்னம்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் முதல் விமர்சனம் வெளியாகி உள்ள நிலையில் அந்த விமர்சனமே பாசிட்டிவாக இருப்பதால் இந்த படமும் 100 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் நடித்த  முந்தைய திரைப்படமான ’மார்க் ஆண்டனி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷாலுக்கு கிடைத்த வெற்றி படம் அது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முன்பதிவுகள் மிக வேகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் முன்பதிவிலேயே இந்த படத்தின் வசூல் சாதனை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.



ஏற்கனவே ‘ரத்னம்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் நிச்சயம் இந்த படம் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும். அதுமட்டுமின்றி போட்டிக்கு எந்த படமும் இல்லாமல் ‘ரத்னம்’ படம் மட்டுமே ரிலீஸ் ஆவதால் விஷாலுக்கு இன்னொரு ஜாக்பாட் அடித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் யோகேந்திரன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் நேற்று ‘ரத்னம்’ படத்தை பார்த்ததாகவும், படம் சூப்பராக இருப்பதாகவும், ஹரி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விஷாலின் அதிரடி ஆக்சன் காட்சிகள், அம்மா சென்டிமென்ட், யோகி பாபுவின் காமெடி, தேவி ஸ்ரீ பிரசாத் இசை என அனைத்து அம்சங்களும் பாசிட்டிவாக இருப்பதால் விஷாலுக்கு இன்னொரு வெற்றி உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர் கூறுவதை பார்க்கும் போது இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது உறுதி என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement