• Jun 20 2025

"மதராஸி" படத்தினை வாங்கிய ஓடிடி...!என்னது இவ்வளவு கோடியா?

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்  இவர் பல படங்களில் நடித்து ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். இவர் இறுதியாக நடித்து  இருந்த "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் தற்போது நடித்து வரும் "மதராஸி" திரைப்படம்  குறித்த தகவல்  ஒன்று வெளியாகி உள்ளது. 


தற்போது இவர் A.R முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் "மதராஸி" திரைப்படத்தில்  நடித்து  வருகின்றார்.  மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகின்றார் . இந்த  திரைப்படத்தின் பட்ஜெட்   200 கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக இயக்கப்படுவதாக தகவல்கள்  வெளியாகி இருந்தன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் படம் என்றால் ரசிகர்கள் மத்தியிலும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் பிரம்மாண்டமான வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். 


இந்த நிலையில் சில  மாதங்களுக்கு முன்பு மதராசியின் 44 வினாடிகளை கொண்ட title glimpse வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி  உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆக்சன் மற்றும் பரபரப்பான காட்சிகளில் நடித்து வருகின்றார். 


மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில்  செப்டம்பர் 5  வெளியிட படக்குழுவால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓடிடி  மற்றும் நெட்ஃப்லிக்ஸில் 23 கோடிக்கு மேல்  விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




Advertisement

Advertisement