சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ரோகிணி வித்தியாவின் வீட்டில் கிரிஷை தங்க வைக்கின்றார். மேலும் கிரிஷிடம் ஒரு கிழமை பொறுத்துக் கொள்ளுமாறும் அதன் பின்பு தன்னுடனே அழைத்து செல்வதாகவும் கிரிஷை சமாதானப்படுத்தி விட்டு செல்கிறார்.
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து தனியா வருவதைப் பார்த்து கிருஷ் எங்கே? என்று அண்ணாமலை வினாவுகின்றார். அதற்கு கிரிஷை காணவில்லை என்று மிகவும் மன வேதனை உடன் முத்து சொல்லுகின்றார். மேலும் கிரிஷை அவனுடைய அம்மா ஸ்கூலுக்குச் சென்று அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றார்.
இதைக் கேட்ட மீனா அப்படி என்றால் கிரிஷ் உடைய அம்மா இங்கே தான் இருந்து இருக்கா போல, இந்த விஷயத்தில் ஏதோ மர்மம் இருக்கின்றது. அவர் உண்மையிலேயே துபாயில் இல்லை. இங்கு தான் இருக்கின்றார். எங்களுக்கு உண்மை தெரிய கூடாது என்று நினைக்கின்றார் போல, இல்லை என்றால் க்ரிஷ் இத்தனை நாள் எமது வீட்டில் இருந்ததற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் சென்றிருக்க மாட்டார். ஒரே நாளில் எப்படி எல்லாம் மாறும் என்று சந்தேகத்தை ஏற்படுத்துகின்றார்.
அதன் பின்பு மீனா அவருடைய அம்மாவுக்கு பூ கொடுக்க செல்கின்றார். அங்கு கோவிலில் ரோகினியின் அம்மா அன்னதானம் சாப்பிடுகின்றார். மீனாவும் மீனாவின் அம்மாவும் கோவிலுக்குள் நுழையும் போது திடீரென மீனாவுக்கு போன் வந்துவிடுகிறது. இதனால் அவர் ரோகிணியின் அம்மாவை பார்க்காமல் திரும்பி வந்து விடுகின்றார். ஆனால் ரோகிணியின் அம்மா மீனாவின் அம்மாவை பார்த்துவிட்டு இனி இந்த கோயில் பக்கம் தலை காட்டக் கூடாது என்று தலையில் துண்டை போட்டு மறைத்துக் கொண்டு வெளியே வந்து விடுகின்றார்.
இறுதியில் விஜயா பார்வதி வீட்டில் நடந்தவற்றை சொன்னதோடு, தான் அடுத்ததாக ஜோகா கிளாஸ் ஆரம்பிக்க உள்ளதாகவும் சொல்கின்றார். இதைக் கேட்ட சிந்தாமணி அதனை போஸ்டர் அடித்து பெரிதாக ஆரம்பிப்போம் என்று ஆசை காட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!