பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா சுதாகரிட பாக்கியன்ர ரெஸ்டாரெண்டப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட சுதாகர் எனக்கும் உங்கட அம்மாவோட ரெஸ்டாரெண்டப் பாத்தவுடனே ஷாக்காத் தான் இருந்தது என்றார். மேலும் இந்தமாதிரி சின்னதா ஒரு ரெஸ்டாரெண்ட உங்கட அம்மா வாங்கியிருக்க வேணாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா ரெஸ்டாரெண்டோட சைஸ் எனக்குப் பிரச்சனை இல்ல என்கிறார்.
இதைக் கேட்ட நிதீஷ் dinner டைம்ல பேசவேண்டிய விஷயமா இது என்று இனியாவப் பாத்து கோபமாகக் கேக்கிறார். அதைக் கேட்ட சுதாகர் இனியா ஏதோ வருத்தமா பேசிட்டிருக்கா பேசட்டும் என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியா, அம்மா விருப்பப்பட்டா ரெஸ்டாரெண்ட என்ர பேருக்கு மாத்தினாங்க என்று சுதாகரைப் பாத்துக் கேக்கிறார். அதுக்கு சுதாகர் விருப்பம் இல்லாமல் யாரும் தங்கட ரெஸ்டாரெண்டை கொடுக்க மாட்டாங்க என்று சொல்லுறார்.
அதைத் தொடர்ந்து சுதாகரின் மனைவி இதெல்லாம் பெரியவங்களோட விஷயம் இதுக்குள்ள நாங்க தலையிடக் கூடாது என்று சொல்லுறார். அதைக் கேட்ட இனியா என்ன நடந்தது என்று தெரியணும் என்று சொல்லுறார். பின் இனியா சுதாகரைப் பாத்து நீங்க அம்மாகிட்ட போர்ஸ் பண்ணி ரெஸ்டாரெண்டை வாங்கினீங்களா என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் அப்புடி எல்லாம் எதுவும் இல்ல என்று சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிறார்.
இதனை அடுத்து பாக்கியாவோட ரெஸ்டாரெண்டுக்கு கவுன்சிலர் வந்து சாப்பிட என்ன இருக்கு என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா ரெஸ்டாரெண்ட மூடுற டைம் வந்திட்டு இப்ப ஒரு சாப்பாடும் இல்ல என்கிறார். பின் சாப்பாட்டைத் தந்தால் தான் இங்க இருந்து போவன் என்று சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா சாப்பாட்டை செய்து கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!