• Jul 18 2025

திருமணமா..? அனிருத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு...

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ‘ராக் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் டாப் லெவலில் பிஸியாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது கூலி, மதராஸி, ஜெயிலர் 2, ஜனநாயகன் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் இசை வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.  


இந்நிலையில் சன் நெட்வர்க் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் அனிருத் திருமணம் செய்யவுள்ளார் என சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது. இது ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து அனிருத் தனது டுவிட்டர் (X) பக்கத்தில் "திருமணமா? இது எல்லாம் வெறும் வதந்தி தான். தயவுசெய்து இந்தக் குறும்புகளை நிறுத்துங்கள்" என பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அனிருத்தின் இந்த நேரடித் பதிலுக்கு அவரது ரசிகர்கள் பாராட்டும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement