• Sep 02 2025

பிறந்தநாள் அன்றே கொந்தளித்த நடிகர் விஷால்! செருப்பால அடிங்க! இங்கேயும் விரைவில் வரப்போகிறது!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமா பெருமையாக பேசப்பட்டு வரும் நிலையில் இப்போது சோகமான சம்பவங்களும் நடந்துள்ளது.  அதாவது நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை மூலம் மலையாள திரையுலகில் பெண் நடிகைகள் எதிர்க்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவரை வெளியாகியுள்ளது.


நடிகைகள் பலரும் பிரபலமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். அதிலும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  மலையாள சினிமாவில் நடிகைகள் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துவரும் விஷயம் குறித்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஷாலிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளனர்.


அதற்கு அவர், சினிமா வாய்ப்புக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பவர்களை செருப்பால் அடிங்க. கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் பேட்டி கொடுத்துள்ளார்.மலையாள படங்கள் குறித்து இப்போது மக்கள் அதிகம் பேசுகிறார்கள், அந்த மொழி படங்களை அதிகம் வரவேற்கிறார்கள். இந்நிலையில் இப்படி நடந்துள்ள சம்பவங்கள் முகம்சுளிக்கவைக்கிறது. 




Advertisement

Advertisement