கடந்த ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகிய கங்குவா திரைப்படம் ஒரு சில விமர்சனங்களின் மத்தியில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியில் இருந்து நடிகர் சூர்யா மீண்டிருந்தாலும் இயக்குநரால் முடியாமல் போனது. மேலும் இவர் இயக்கி தொடர்ந்து வெளியாகிய வீரம் ,விசுவாசம் ,வேதாளம் படங்கள் ஹிட் கொடுத்தது.
ஆனாலும் விவேகம் ,கங்குவா பட தோல்வியினால் இவர் தற்போது அண்ணாநகரில் இருந்த தனது அலுவலகத்தை இடம்மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் வாடகை தொல்லை காரணமாக இந்த முடிவை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தமையினால் ராசி இல்லை என்கின்ற ஒரே காரணத்துக்காக குறித்த முடிவினை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Listen News!