தனிப்பட்ட வாழ்வில் மிகுந்த கட்டுப்பாடுடன் வாழ்பவரான நடிகர் அஜித் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் ஒரு ஹிந்தி டீவி சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். பத்ம பூஷன் விருது பெறுவதற்காக டெல்லிக்கு சென்றிருந்த போது , அங்கு கதைத்த அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது அஜித் குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுக்காக அவர் டெல்லி சென்று பாராட்டுப் பெற்றார் என்பது ரசிகர்களிடையே பெருமையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நேர்காணலின் உணர்வு பூர்வமான பகுதி என்னவெனில், அஜித் தனது மனைவி ஷாலினியைப் பற்றி கூறிய வார்த்தைகளே. அவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய காரணமாக, ஷாலினியின் உறுதிமொழியும், உறுதுணையும் இருக்கிறது என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மேலும்,"நான் வாழ்க்கையில் எடுத்த எல்லா முடிவுகளும் சரியாக இருந்ததில்லை. ஆனால் நான் தவறின போதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி வைத்தவர் ஷாலினி. அவர் தான் என் வலிமையின் பில்லர். அவர் என்னை ஒருநாளும் discourage பண்ணவில்லை. நான் எந்தத் துறையில் செல்வதற்கும், அவர் முழு ஆதரவுடன் இருந்தார். இன்று நான் எதையாவது சாதித்திருப்பது என்றால், அதற்கான முழுக் கிரெடிட்டும் அவருக்கே செல்லும்." என்றும் கூறினார் அஜித்.
Listen News!