• Apr 26 2025

இது Receptionஆ இல்ல Festivelஆ...!ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்திய அமீர் - பாவனி..!

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த காதல் ஜோடி தான் அமீர் மற்றும் பாவனி. இவர்கள் சமீபத்தில் தங்கள் திருமணத்தை வெகு விமர்சையாக செய்து கொண்டனர். இப்பொழுது அந்த திருமண நிகழ்வுக்குப் பின் நடந்த Reception விழா வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Reception நிகழ்வின் முக்கியமான தருணமாக அமீர் பாவனியின் கையை பிடித்து மேடையில் அழைத்துச் சென்றது காணப்படுகின்றது. அந்தத் தருணம், பார்வையாளர்களின் இதயத்தைக் கவர்ந்திருக்கும் வகையில் மிகுந்த அழகாக விளங்கியது. 

அதனைத் தொடர்ந்து, மேடையில் இருவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி ரெண்டு பேரும் கேக்கினை ஊட்டிக் கொண்ட அந்த நிமிடங்கள் அங்கிருந்த அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில், அந்த மேடையில் பட்டாசு கொளுத்தப்பட்டு Reception திருவிழாவாகவே மாறிக்கொண்டது.


இந்த  Reception நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் போட்டியாளர்களும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement

Advertisement