பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெருக்கம் காதலாகும் என்ற நிலையை பலர் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எனினும், அந்த நிகழ்ச்சியின் மூலமாக உண்மையான காதலாக உருவெடுத்து பின் திருமணமாக முடிந்தது தான் நடிகை பாவனி ரெட்டி மற்றும் அமீருக்கு இடையிலான உறவு. இவர்கள் இருவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த போது இருவருக்கும் இடையில் காதல் உருவானது. ரசிகர்களுக்கு முன்னிலையாக அவர்கள் காதலை உறுதிப்படுத்தியதும், பின் திருமணம் செய்து கொண்டதும் தற்போதைய வலைத்தள சூழலில் முக்கியமான விடயமாகப் பேசப்பட்டு வருகின்றது.
2021ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசனில் பாவனியும் அமீரும் பங்கேற்ற போது, நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் இவர்களுக்குள் உருவான நெருக்கம், வெளியில் உள்ள ரசிகர்களிடையே ‘பிக்பாஸ் காதல் ஜோடி’ என அழைக்கும் நிலையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி முடிந்த சில மாதங்களின் பின், இருவரும் இணையத்தில் புகைப்படங்களையும், ஒன்றாக எடுத்த வீடியோக்களையும் பகிர்ந்ததன் மூலம் அவர்களது உறவு உறுதியாகியுள்ளது. "நாங்கள் காதலிக்கிறோம், வாழ்க்கைத் துணையாக இருக்க விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் இவர்களின் காதல் கடந்த வாரம் நிறைவடைந்து கொண்டது. இவர்களின் திருமணம் மிக அழகாகவும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து, அமீர் மற்றும் பாவனி இருவரும் ஹனிமூனுக்கு சென்றுள்ள தகவல் தற்பொழுது இணையத்தில் பரவியிருந்த நிலையில், பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
பாவனி வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக லைக்குகள் குவிந்து வருகின்றனர். இவர்கள் எங்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர் என்பது அதிகார பூர்வமாக தெரியவில்லை. எனினும் ரசிகர்கள் அனைவரும் "இந்த ஜோடி செம்ம கியூட்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!