• Aug 20 2025

அறிமுக இயக்குநருடன் இணையும் அர்ஜுன்...! வைரலாகும் பூஜை புகைப்படங்கள்...!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என திரை உலகில் தனக்கென ஒரு உயரிய இடத்தைப் பெற்றுள்ளார். 'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அர்ஜுன், ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றவர். சமீபத்தில் லியோ மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக தனது வேறுபட்ட நடிப்பால் பாராட்டுகளை பெற்றிருந்தார்.


இந்த நிலையில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இப்படத்தில்  அர்ஜுனின் முக்கிய கதாபாத்திரங்களில் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு எமோஷனல் த்ரில்லராக உருவாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


படத்தின் தொழில்நுட்ப குழுவும் வலுவாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவை பிரபல சினிமாடோகிராபர், இசையமைப்பை முன்னணி இசையமைப்பாளர் ஒருவரும் மேற்கொள்கிறார். முழுக்க முழுக்க நவீனமாகவும், விறுவிறுப்பாகவும் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement