• Apr 30 2025

வெளியானது "மாமன்" படத்தின் மாஸான அப்டேட்..! என்ன தெரியுமா..?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் சூரி முதலிடத்தில் உள்ளார். தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த இவர் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வருகின்றார். தற்போது பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் "மாமன்" படத்தில் நடித்துவருகின்றார். மே16ம் திகதி இப்படம் திரையரங்குகளில்  வெளியாகவுள்ள நிலையில் நாளைய தினம் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

"விடுதலை " படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றார். இதனை அடுத்து, பல படங்களில் தனது திறமையைக் காட்டி வருகின்றார். ஆரம்பத்தில் தனது நகைச்சுவை மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஹீரோவாக நடித்தும் மக்களைக் கவர்ந்துள்ளார்.


மேலும் "மாமன்" படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கருடன் படத்தினை தயாரித்த நிறுவனமான லார்க் ஸ்டூடியோ தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் "மாமன்" படத்தின் டிரெய்லர் நாளைய தினம் வெளியாகவுள்ளது என்ற தகவல் தற்பொழுது சமூக வலைத்தளப் பக்கத்தில் பரவி வருகின்றது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement