தமிழ் சினிமா தயாரிப்பாளராக செயல்படும் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய ரெய்ட், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனை எதற்காக? யார் யார் இதில் சிக்க இருக்கிறார்கள் என்ற தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
கடந்த வாரம், சென்னையில் டான் பிக்சர்ஸ் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் ED அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்ட் நடத்திய தகவல்கள் முதலில் வெளியாகியிருந்தது. இந்த ரெய்டின் போது பணம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இவ்வாறு, அதிரடி விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரபல தமிழ் நடிகர்கள் மற்றும் சினிமா பி.ஆர்.ஓ.க்கள் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனக்கூறப்படும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த விசாரணைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிலம்பரசன் ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளளனர். இந்த சம்பவம் தற்பொழுது இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.
Listen News!