தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக வலம் வரும் ரவீந்தர் சந்திரசேகர் தற்போது ஒரு மிகப்பெரிய மோசடி வழக்கில் சிக்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் வசிக்கும் பொதுமக்கள் சிலர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனும் வாக்குறுதியைக் கேட்டு, ரூ. 5.24 கோடி பணத்தை முதலீடு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் திரும்ப பணம் கேட்கும்போது, வேறு எதுவும் செய்ய முடியாது எனக் கூறி பணம் தரப்படாமல் ஏமாற்றப்பட்டனர்.
இந்த வழக்கில் முதன்மையான சந்தேகநபராக ரோகன் என்ற நபர் பொலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, இந்த மோசடி நடவடிக்கையின் பின்னணியில் சில பிரபலங்கள் தொடர்புடைய தகவல்கள் வெளியானது. குறிப்பாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் பெயர் விசாரணையில் இடம்பெற்றது.
திரைப்படத் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றிலும் மிகவும் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இந்நிலையில் 5.24 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியிருப்பது அவரது படைப்புகளை நேசிக்கும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!