தென்னிந்தியாவில் தனது சிறப்பான நடிப்பால் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை சமந்தா. தற்போது, இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் அவருக்கு நெருக்கம் இருப்பதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவரது முன்னாள் மாமியார் அமலாவுடன் ஒரே மேடையில் காட்சியளித்த வீடியோ சமீபத்தில் வைரலாகியுள்ளது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த விவாகரத்து மற்றும் அதற்குப் பிறகு எதிர்கொண்ட உடல்நிலை பிரச்சனை ஆகியவை அவரை மீண்டும் திரையுலகில் நிலைநிறுத்த வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் வெளியான புகைப்படங்களில், சமந்தாவும் ராஜ் நிதிமோருவும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு ஒன்றாக சென்றிருப்பது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பயணம் ரசிகர்களிடையே "இவர்களுக்குள் காதல் உறவா?" என்ற சந்தேகங்களைத் தூண்டியது.
இந்த சூழ்நிலையில், சமந்தா சமீபத்தில் நடந்த ஒரு திரையுலக விருது விழாவில், தனது 15 வருட திரைப் பயணத்திற்காக விருது பெற்றார். அந்த விழாவில் ஆச்சரியமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் நடந்தது முன்னாள் மாமியார் அமலாவும் அந்த மேடையில் இருந்தது தான்.
மேலும், அந்நிகழ்வில் சமந்தாவின் 15 வருட திரை வாழ்க்கைக்காக சிறந்த விருது ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த சமந்தாவின் மாமியார் கைதட்டிப் பாராட்டினார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் முன்னாள் மாமியாராக இருந்தாலும் சமந்தா மீது எவ்வளவு பாசமாக இருக்கின்றார் என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!