• Sep 02 2025

ப்ரியா அட்லீ வெளியிட்ட வீடியோ... சம்பவம் இருக்கு அப்போ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லீ தனது திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ப்ரியாவை காதலித்து திருமணம் முடித்துக்கொண்டார். 


எந்த ஒரு நிகழ்ச்சியோ, பட நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் அட்லீ தனது மனைவி ப்ரியாவை உடன் அழைத்து வருவார். சமீபத்தில் கூட ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு தனது மனைவியை அழைத்து சென்றார்.


நடிகை ப்ரியா தனது இன்ஸ்டாவில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து ஒரு  வீடியோவை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்ததும் ரசிகர்கள் அவர் புதிய தொழிலை தொடங்கும் அறிவிப்பாக தான் இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். என்ன விடயம் என்று அவர் தெரிவிக்கும் வரையில் காத்திருப்போம். 


Advertisement

Advertisement