• Aug 21 2025

நாட்டாம நாட்டாம தான்..! சரத்குமாரின் FitnessJourney -ய பாத்தீங்களா.? இதோ வைரல் வீடியோ

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்  கதாநாயகர்க ளுள் ஒருவர்தான்  சரத்குமார். அந்த நேரத்தில் சரத்குமார் நடித்த சூரிய வம்சம், நட்புக்காக, நாட்டாமை போன்ற படங்களை இப்போதும் பெரும்பான்மையான ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.  தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சரத்குமார்  இப்போதும் கதாநாயகனாக தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகின்றார். 

சரத்குமாருக்கும் ஆரம்பத்தில் சினிமாவில்  சீக்கிரமாகவே வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் முன்னுக்கு வர பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.  படிப்படியாக முன்னேறி தான் தற்போது  டாப் ஹீரோவாக வலம் வருகின்றார்.  இதனை  அவருடைய மகளும் நடிகையுமான வரலட்சுமி கூட பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். 


சரத்குமாருக்கு சிறுவயதில் இருந்தே பிட்னஸ்சில் அதிக ஆர்வம் காணப்படுகின்றது. இவர் தன்னுடைய 20 வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஆனாலும் அவருக்கு சரியான வேலை வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால்  பேப்பர் போடும் வேலை கூட பார்த்திருக்கின்றார்.  அதற்குப் பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் அறிமுகமாகி மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். 


தமிழ் சினிமாவிலேயே இப்போதும்  இவருக்கு வயசு ஆகாதா?என்று  வியந்து பார்க்கும் வகையில் அவருடைய உடலை கட்டுக்கோப்பாக பாதுகாத்து வருகின்றார் சரத்குமார். 

இந்த நிலையில்,  நடிகர் சரத்குமார் கடுமையாக ஒர்க் அவுட் பண்ணும்  வீடியோ ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் ஒர்க் அவுட் பண்ண சொல்லிக் கொடுப்பதோடு இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் செயற்படுகிறார்.  நாளை மற்றொரு உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுவதாகக் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். இதோ அந்த வீடியோ.,

 

Advertisement

Advertisement