தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வரும் சூர்யா, திரைப்பட ரசிகர்களிடம் மீண்டும் ஒரு மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “ரெட்ரா” திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாப்பாத்திரங்கள் எனப் பல பரிமாணங்களில் இப்படம் சுவாரஸ்யத்தை தருகின்றது.
திரைப்படம் தூத்துக்குடி பகுதியில் கட்டப்பஞ்சாயத்தை கட்டிக்கொள்கிற ஒரு கரடுமுரடான உலகத்தில் தொடங்குகின்றது. அங்கு ஜோஜூ ஜார்ஜ், அதாவது 'பாஸ்', ஒரு ஊர் தாதாவாக காணப்படுகிறார். தனது அடியாள்களுடன் கூடி இயங்கும் இவர், ஒரு பணிபுரியும் ஊழியரின் மரணத்துக்குப் பிறகு, அந்த ஊழியரின் மகனாக இருக்கும் சிறுவனை, அதாவது சூர்யாவை தனது அடியாளாக வளர்க்கிறார்.
வளர்ந்த சூர்யா, தனது காதலியான பூஜா ஹெக்டேவை திருமணம் செய்ய விரும்பும் போது, அடிதடி வாழ்க்கையை விட்டு விலக முடிவு செய்கிறார். அதே நேரத்தில், கேரளாவில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை அவரின் தந்தை ஒளிக்கிறார்.
இது தான் கதையின் திருப்புமுனை, சூர்யாவின் செயலால் கோபம் கொண்ட ஜோஜூ, பூஜாவை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதற்கு பதிலடியாக, பூஜாவின் கையை வெட்டி, காப்பாற்றும் சூர்யா, சிறைக்கு செல்வதைக் கட்டாயமாக்குகிறார். பூஜா தலைமறைவாகி அந்தமானுக்குச் செல்ல, அவளைக் கண்டுபிடிக்க சிறையிலிருந்து தப்பும் சூர்யா, கதையை அந்தமானிலேயே முடிக்கிறார்.
இதன்மூலம் சூர்யா தனது பன்முகத் திறமைகளை இன்னும் ஒரு முறை நிரூபித்துள்ளார். தொடக்கத்திலிருந்து கடைசி சண்டைக்காட்சி வரை, அவர் முகபாவனைகள், கோபம், காதல், துயரம் என அனைத்திலும் தெளிவாகாக காட்சி அளித்துள்ளார். படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் ரொம்பவே நல்லா இருந்தது கட்டாயம் அனைவரும் தியட்டரில் வந்து பார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
Listen News!