• Jul 18 2025

"மார்கன்" படத்தைப் பார்த்த மக்களின் ரியாக்சன் என்ன தெரியுமா.? வெளியான விமர்சனம் இதோ!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, பளிச்சென்று தோன்றும் படைப்புகளை வழங்கி வருகிறார் விஜய் ஆண்டனி. இன்று (ஜூன் 27) ரிலீஸாகியுள்ள 'மார்கன்' என்ற புதிய திரைப்படம், அவர் நடிப்பில் வெளியான திரைபடங்களில் ஒரு முக்கியமான படமாகவே மதிக்கப்படுகிறது.


மார்கன் ஒரு கிரைம் திரில்லர் படமாகவே காணப்படுகிறது. சமூகத்தில் நிறத்தின் அடிப்படையில் நடைபெறும் அடக்குமுறைகள், உருவக் கேலிகள், மற்றும் மனதளவிலான தீர்மானங்களை தீவிரமாக பேசும் இந்த படம் தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஆழ்ந்த சிந்தனையையும் உருவாக்கி வருகின்றது.

விஜய் ஆண்டனி, எப்போதும் மெளனமாக இருந்தாலும் மனதைக் கொள்ளை கொள்ளும் பாவனையுடன் நடிக்கக்கூடிய நடிகர். இப்படத்திலும் அவர் மனிதநேயம், கோபம், குழப்பம், ஆதங்கம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.


இப்படத்தில் இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் suspense & emotion-ஐ அடக்கி வைத்திருக்கிறார். அதனால், படம் முழுவதும் ஒரு தொய்வில்லாமல் பயணிக்கிறது என விமர்சகர்களும், ரசிகர்களும் ஒரே குரலில் கூறுகிறார்கள். சிலர், “கதை, நடிப்பு, திரைக்கதை ரொம்பவே நன்றாக உள்ளது. நிறத்தைக் கொண்டு ஒருவரை அடக்குவது, உருவ கேலி செய்வது தவறு என படத்தில் கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு பாதிப்படைகிறார்கள் என்பதையும் படம் உணர்த்துகிறது.” என்றும் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement