• Apr 27 2025

வீல்சியாரில் கியூட்டா கார் ஓட்டுவது போல ஆக்சன் கொடுத்த நடிகை - வெளியான வீடியோ இதோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைத் தரும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது. சாவா திரைப்படத்தின் வெளியீட்டின் பின்னர் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில், ரசிகர்கள் எதிர்பார்த்திராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ராஷ்மிகாவின் காலில் ஏற்பட்ட காயத்தால்  மீண்டும் வீல் சியாருடன் புரொமோஷனுக்கு வந்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.


காயம் ஏற்பட்டிருந்தாலும் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கையால் ராஷ்மிகா திரும்பவும் வீல் சியாருடன்  வந்து, பட புரொமோஷனில் கலந்து கொண்டார். அவரது இந்த தைரியம், ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்ததுள்ளது. ராஷ்மிகா மேலும் கூறியதாவது, நான் காயத்தில் இருந்தபோதிலும், ரசிகர்கள் என் மீது அதிகளவு அக்கறையைக் காட்டினார்கள் என்றார்.

மேலும் அவர் வீல்சியாரில் வரும்போது  கியூட்டா கார் ஓட்டுவது போல ஆக்சன் கொடுத்துக் கொண்டு வந்தார். இது பார்க்கவே ரொம்ப நன்றாக இருந்ததுடன் இதனைப் பார்த்த  பெரும்பாலான ரசிகர்கள் அவர்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.






Advertisement

Advertisement