• May 08 2025

ப்பா.. மணிமேகலை இத்தனை கோடிகளை வச்சிருக்காங்களா..! நம்பவே முடியாமல் இருக்கே..!

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திய சிறந்த தொகுப்பாளினியாக மணிமேகலை காணப்படுகின்றார். தனது சிறந்த தொகுப்புத் திறன், இயல்பான பேச்சு மற்றும் ரசிகர்களுடன் உறவு போல் பேசும் பாணி ஆகியவற்றின் மூலமாக பலரது மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

அத்தகைய தொகுப்பாளினி மணிமேகலை இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருவதுடன் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே, தொகுப்பாளினிகள் மற்றும் யூடியூப் பிரபலங்களின் வருமானம் குறித்து ரசிகர்களிடையே எப்போதும் ஒரு ஆவல் இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி, மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைனிடம் சுமார் ரூ. 7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மணிமேகலை தனக்கென ஒரு யூடியூப் சானல் ஆரம்பித்ததிலிருந்தே அதிகளவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அதன் பிறகு, விஜய் டீவி, ஜீ தமிழ் போன்ற முக்கிய சேனல்களில் தொகுப்பாளினியாக இணைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

Advertisement

Advertisement