• Jul 18 2025

" எனக்கு மகன் பிறந்திருக்கு.." வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் பதிவு..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ரியாஸ்கானின் மகனும் பிக்போஸ் பிரபலமுமாகிய ஷாரிக்காசன் கடந்த ஆண்டு மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் ஷாரிக்காசன் மனைவியின் வளைகாப்பை மிகவும் பிரமாண்டமாக  குடும்பத்துடன் இணைந்து நடத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையை தோளில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அந்த பதிவுடன் " என் வாழ்க்கையின் காதலுக்கு இதுவரை இல்லாத சிறந்த பரிசை கொடுக்க விரும்பினேன். அதனால், நான் அவளுக்கு என் ஒரு மினி பதிப்பைக் கொடுத்தேன்!  ஜூன் 28, 2025 அன்று எங்கள் ஆண் குழந்தையை வரவேற்றோம் " என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement