• Apr 27 2025

நடிகர் பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிரதீப்விராஜ் கடந்த சில வருடங்களாக வசூலில் வெற்றி பெற்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைப் பிடித்துள்ளார். தற்போது அவர் பல புதிய படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார்.இந்நிலையில் தற்போது இவரிற்கு வருமான வரித்துறை  நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.


அண்மையில் வெளியாகிய பிரதீப்விராஜ் நடித்த "எல்2 எம்புரான்" படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த படத்தில் அவர் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் மீது வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


மேலும் இவர் கடைசியாக நடித்த 3 படங்களின் கணக்குகளை கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் பிரதீப்விராஜின் ரசிகர்கள் இந்த பிரச்சினையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றும் இன்று எம்புரான் பட தயாரிப்பாளரிற்கும் அவரது சொத்துக்களிற்கு அதிரடி சோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement