• Apr 27 2025

முதல் நாளே அதிகளவு வசூலைக் குவித்த "கிங்ஸ்டன்" - சந்தோசத்தில் படக்குழு!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் தனது 25வது திரைப்படமான 'கிங்ஸ்டன்' படம் மூலம் திரையரங்குகளில் அசத்தியுள்ளார். இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கிய இப்படம் திரில்லர் மற்றும் ஹாரர் கதைக்களத்தைக் கொண்டிருந்ததுடன் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் திவ்யபாரதி, இளங்கோ குமரவேல் மற்றும் சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புதிய முறையில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 


விமர்சன ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தாலும்  'கிங்ஸ்டன்' படம் முதல் நாளே உலகளவில் ரூ.1.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் கமல் பிரகாஷிற்கு இது ஒரு முக்கியமான படமாக இருப்பதுடன் முன்னணி நடிகரா ஜி.வி. பிரகாஷுக்கு இது மாஸான படமாகவும் இருக்கிறது. இப்படம் எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெற்றால் ரசிகர்களிடம் ஹாரர் படங்களுக்கு மதிப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement