• Apr 26 2025

மீனாவிடம் சிக்கிய சீதாவின் காதலன்..! ரோகிணியை நினைத்து பீல் பண்ணும் மனோஜ்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து தன்ர நண்பரை ரோட்டில பாத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார். அப்ப அவர் தான் உங்களைத் தான் பாக்கோணும் என்று நினைச்சதாகச் சொல்லுறார். மேலும் தனக்கு இண்டைக்குப் பிறந்தநாள் என்றும் சொல்லுறார். இதனை அடுத்து முத்து தன்ர நண்பருக்கு மீனாவைப் பற்றிச் சொல்லுறார். மேலும் முத்து அவருக்கு காதல் பற்றிய அட்வைஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதனை அடுத்து மீனாவோட அம்மா சும்மாவே விஜயா நாம பூக்கட்டுறவங்க என்று நம்மள நேரடியாவே கேலி பண்ணுறவங்க இப்ப ரோகிணி இவளா பொய் சொன்னதுக்கு சும்மாவா இருந்தாங்க என்று கேக்கிறார். அதுக்கு மீனா, அத்த ரோகிணி மேல கோபப்பட்டு அடிச்சத என்னாலயே நம்ப முடியாமல் இருந்தது என்றார். இதனை அடுத்து மீனாவோட அம்மா ரோகிணிக்கு நிறைய பொய் சொல்லி பழக்கமாக இருக்கும் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து மீனா அத்த இனிமேல் ரோகிணிய சும்மாவே விடமாட்டாங்க என்று சொல்லுறார். பின் சீதா தன்ர லவ்வரோட கோவிலில நின்று கதைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் மீனா கோவிலுக்கு வாறதைப் பாத்து சீதா உடனே தன்ர லவ்வர அங்க இருந்து போகச் சொல்லுறார். இதனை அடுத்து முத்துவும் தன்ர நண்பரோட கோவிலுக்கு வாறார்.

அதைத் தொடர்ந்து மீனா முத்துவைப் பாத்து லவ் பண்ணுறதுக்கு ஐடியா கொடுக்கிறீங்களா என்று கேட்டு கோபப்படுறார். இதனைத் தொடர்ந்து மனோஜ் தனக்காக ரோகிணி ஹெல்த் இன்சுரன்ஸ் செய்துள்ளார் என்பதனை அறிந்து ரொம்பவே பீல் பண்ணுறார் . இதுதான் இன்றைய எபிசொட்.


Advertisement

Advertisement