மலையாள திரையுலகில் நம்பிக்கைக்குரிய பெயராக விளங்கும் நடிகர் மோகன்லால் மீண்டும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'துடரும்' என்கின்ற புதிய மலையாள திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவர் நடித்திருக்கும் கதாப்பாத்திரமும், கதையின் வளர்ச்சியும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் மோகன்லால் மிக அப்பாவியான மனிதராக கதையின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஒரு சாதாரண நபராகவே மிக நுணுக்கமாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். 'துடரும்' படத்தில் குடும்ப பாசம், சாதாரண மனிதரின் வாழ்வு போன்றவை இயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் பாதியில், ஒரு கொலை சம்பவம் மூலமாக கதை திடீரென திரில்லர் திசையில் பயணிக்கிறது.
கதையில் ஏற்படும் சிறு திருப்பங்கள், கடைசிவரை யூகிக்க முடியாத வகையில் அமைந்துள்ளன. டுவிஸ்ட் மற்றும் கிளைமாக்ஸ் இரண்டும் இணைந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது இயக்குநரின் திறமை என படத்தைப் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மேலும் படத்தினை அனைவரும் தியட்டரில் குடும்பத்துடன் வந்து பாருங்கள் எனவும் தெரிவித்திருந்தனர்.
Listen News!