சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதாவும் அருணும் கோயிலில் பேசி கொண்டிருக்கும் போது அருணுக்கு போன் வருகின்றது .முத்துவும் மீனாவும் கோயிலுக்கு வருகின்றனர். அப்போது மீனா சீதாக்கு பூ வாங்க மறந்திட்டன் நான் வாங்கிக்கொண்டுவறேன் என்று சொல்லிட்டு போக முத்துவும் அருணும் சந்தித்து முறைத்துப்பார்த்த விட்டு இருவரும் விலகி சென்று விட்டனர்.
பின்பு முத்து மீனாவிடம் நாங்க வேற எங்கவது போவோம் சீதாவையும் லவ் பண்றவரையும் வர சொல்லு என்று கூப்பிடும் போது அதற்கு மீனா என்னாச்சு என்று கேட்க முத்து அந்த அருண் இங்க தான் இருக்கான் என்று சொல்ல அதற்கு மீனா சரி வாங்க நாங்க போவம் என சொல்லி சீதாவை காண சென்றனர். அங்கு சிரிப்புடன் வந்த சீதா அருணை அழைக்கும் போது அருண் வர முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
இதனை அவதானிக்காத சீதா அருணை பற்றி அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது அக்கா நாங்க வேற எங்காவது போவோம் ஏன்னா அவருக்கு பிடிக்காத ஒருவர் கோயிலில் இருப்பதாக கூற இதனை பார்த்த முத்து கோபத்துடன் செல்ல சீதா ஏன் என்ற பார்வையுடன் மீனாவை பார்க்க அதற்கு அருணுக்கு பிடிக்காத ஆள் இவர்தான் என்று சொல்லி முத்து பின்னாடி மீனா செல்கின்றார்.
மீனா முத்துவிடம் ஏங்க கோவப்படாதிங்க என்று சொல்லும் போது அதற்கு முத்து மீனாகிட்ட சீதாட்ட சொல்லு இது சரி வராது என்று சொல்லி விட்டு கோபமாக முத்து சென்று விட்டார். மீனா திரும்ப போய் சீதாவை கையை பிடித்து அழைத்து செல்கின்றார். கோபத்துடன் மீனா வீட்டிற்கு சென்ற முத்து மீனாட அம்மாட்ட அத்தை சீதா ஒரு பையனை காதலிக்கிறா நானும் மீனாவும் அந்த பையன பார்க்க போனோம். பொலிஸ் என்ற திமிர் பிடித்தவன், அப்பாவிகளிடம்தான் தன் அதிகாரத்தினை பயன்படுத்துவான் என்று கோபத்துடன் சொல்லுகின்றார்.
அதற்கு மீனா அம்மா அந்த பையனோட பெயர் அருணா என்று கேட்க ஆமா என்று முத்து சொன்னார். அத்த இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்க அதற்கு மீனாட அம்மா அந்த பையனோட அம்மாவை சீதா பார்த்தா அப்போது தான் தெரியும் என்று கூறினார். அதற்கு முத்து அந்த அருண் அவளுக்கு தேவையில்லை நான் வேற நல்ல மாப்பிளை பார்கின்றேன். நீங்க என்னை நம்புறீங்க தானே என்று முத்து கேட்க அதற்கு மீனா அம்மா ஆமா என்று சொல்லவும் முத்து என் அம்மா கூட என்னை நம்பினது இல்லை அத்தை .நீங்க சீதாட்ட பேசுங்க என்று சொல்லி விட்டு சொல்லவும் மீனாவும் சீதாவும் வீட்டிற்கு வருகின்றனர் .அப்போது மீனாட அம்மா அவர்களது அப்பா படத்தின் முன்னின்று அழுது கொண்டிருக்கிறார்.
அங்கு மீனாவும் சீதாவும் வீட்டிற்குள் வர அம்மா சீதாவை அடிக்கின்ற அந்த பொலிஸ்காரா அம்மாவ பார்த்திற்கு கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அந்த பையன காதலிச்சுட்டு வந்திருக்கின்றியா கேட்கவும் அதற்கு மீனா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கும் போது அக்கா மாமா இங்க வந்தார்.என்று மீனாட தம்பி சொல்லுகின்றான். எல்லாம் தெரிந்தும் நீயும் அமைதியா இருந்திதாயா என மீனாவிற்கு பேசுகின்றார். அதற்கும் அருணையே திருமணம் செய்து வைக்க சொல்ல அதற்கு அம்மா முத்துட சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லிவிட்டு செல்ல மீனா சீதாட்ட நீ என்ன செய்யப்போறாய் என்று கேட்க சீதா நான் மனசார ஒருவரை காதலிச்சிட்டு வேற ஒருவரை எப்படி திருமணம் செய்து கொள்ளவது. இது தான் இன்றைய எபிசோடு .
Listen News!