• May 24 2025

மீனாவை அடிக்க கை ஓங்கும் முத்து.! பாதியில் நிற்கும் சீதாவின் காதல்.! சிறகடிக்க ஆசை டுடே.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஷோ ரூமில இருந்த மனோஜுக்கு ரோகிணி சாப்பாடு ஓடர் பண்ணி அனுப்பிவிடுறார். அதைப் பார்த்த மனோஜின் பிரெண்ட் பாத்தியா ரோகிணிக்கு உன்மேல எவ்வளவு அக்கறை என்று சொல்லுறார். அதனை அடுத்து மீனா முத்துவப் பாத்து நீங்க எதுக்கு எங்கட வீட்ட போனீங்க என்று கேக்கிறார். அதுக்கு முத்து அதென்ன உங்க வீடு, எங்க வீடு என்று பிரிச்சுப் பாத்துக்கொண்டிருக்க என்று கோபமாகக் கேக்கிறார்

அதைக் கேட்ட மீனா இப்ப இதுவா முக்கியம் அம்மா கிட்ட போய் எதுக்காக சீதாவோட லவ் விஷயத்தை சொன்னீங்க என்கிறார். அதுக்கு முத்து உங்க அம்மா கிட்ட போய் பேசாம வேற யாருகிட்ட பேசுறது என்று கேக்கிறார். மேலும் சும்மா மூத்த பிள்ளை என்று சொல்லுவீங்க இதெல்லாம் கதைக்க கூடாதா என்கிறார். இதனை அடுத்து மீனா முதலில நீங்க என்கிட்ட பேசிட்டு பிறகு தான் அம்மாகிட்ட போய் பேசியிருக்கணும் என்று சொல்லுறார்.


அதைக் கேட்ட முத்து மீனா எனக்கு உன்ன மாதிரி எல்லாம் ஜோசிச்சுப் பேச முடியாது மனசில என்ன தோணுதோ அத உடனே பேசிடுவேன் என்கிறார். மேலும் எது சரி, எது தப்பு என்று எனக்குத் தெரியும் நான் பாக்கிற மாப்பிள்ளைய தான் உன்ர தங்கச்சி கல்யாணம் பண்ணனும் என்று சொல்லுறார். அதுக்கு மீனா சீதாவுக்கு பிடிச்ச பையனத் தானே கல்யாணம் பண்ணி வைக்கணும் என்கிறார்.

இதனை அடுத்து மீனா அருணுக்கு சப்போர்ட் பண்ணிக் கதைக்கிறதைக் கேட்டு முத்து அடிக்கக் கை ஓங்குறார். பின் முத்து சீதாவுக்கு அருணைக் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என்று சொல்லிட்டு அங்கிருந்து போறார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதி புது ரெஸ்டாரெண்ட் தொடங்கிறதுக்காக பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement