• Apr 26 2025

சுந்தர்சி இயக்கத்தில் இணையவுள்ள நயன்தாரா- கார்த்திக் கூட்டணி..

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நயன்தார மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சில பிரச்சினைகள் வந்தாலும் தற்போது படப்பிடிப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


தற்போது நயன்தாராவின் மார்க்கெட் முந்தையதை விட குறைந்துள்ளது. ஒரு சில படங்களில் மாத்திரம் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். இந்த நிலையில் இவர் சுந்தர்சி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக முன்னணி நடிகர் கார்த்தி இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கூட்டணி முதல் முறையாக சேர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. மேலும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement