தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது ஒவ்வொரு தோற்றத்தாலும் ரசிகர்களை கவரும் தனிச்சிறப்பை கொண்டவர். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் நயன்தாரா ஒரே நேரத்தில் கியூட், ஸ்டைலிஷ் மற்றும் சாந்தம் நிறைந்த தோற்றத்துடன் காட்சியளிக்கின்றார்.
இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்டில் நயன்தாரா ஒரு தனிமையில் இருக்கக்கூடிய பெண்ணின் அமைதியான ரசனையை வெளிப்படுத்துகிறார். யாரும் இல்லாத இடத்தில் தனியாக நின்று எடுத்த இந்த போட்டோ ஷூட் ரசிகர்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த புகைப்படங்களில் நயன்தாரா அணிந்திருக்கும் உடைகள், மேக்கப், மற்றும் அவருடைய எக்ஸ்பிரஷன்கள் அனைத்தும் பிரமாண்டமாகவும் எளிமையாகவும் காணப்படுகின்றன. இது புகைப்படம் மட்டும் இல்லாமல், ஒரு கதையை சொல்வது போலவும் காட்சியளிக்கிறது என ரசிகர்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்துக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அத்துடன் தற்பொழுது வெளியான போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சிலர் இப்புகைப்படங்கள் நயன்தாராவின் அடுத்த படத்திற்கான அடித்தளமாக அமையும் எனவும் கருதுகின்றனர்.
Listen News!