பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா வீட்ட வந்திருக்கிறதைப் பார்த்த பாக்கியா நீ எப்ப வந்தனீ என்று கேக்கிறார். மேலும் ஏன் யாருமே என்கிட்ட சொல்லல என்கிறார். அதுக்கு இனியா நான் தான் உனக்கு சப்பிறைஸா இருக்கட்டும் என்று சொல்ல வேணாம் என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார். இதனை அடுத்து செழியன் பாக்கியாவப் பாத்து என்னம்மா ஒரு மாதிரி இருக்கிற என்று கேக்கிறார். மேலும் இனியா வந்ததில நீ உண்மையாவே சப்பிறைஸ் ஆகியிருக்க என்கிறார்.
இதைத் தொடர்ந்து நிதீஷ் நீங்க எல்லாரும் நேற்று போன் எடுத்தப்போ இனியா அழுததாகச் சொல்லுறார். மேலும் வீட்டுக்குப் போகணும் என்று குழந்தை மாதிரி அடம்பிடிச்சுக் கொண்டிருந்ததாகச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து இனியா தான் இனிமேல் இங்கயே இருக்கிறேன் என்று சொல்லுறார். அதுக்கு ஜெனி கலியாணம் முடிச்சா எல்லாரும் புருசன் வீட்டில தான் இருக்க வேணும் என்கிறார்.
அதனை அடுத்து ஈஸ்வரியும் பொண்ணு கலியாணமாகி புகுந்த வீட்டுக்குப் போறதெல்லாம் காலம் காலமாக நடக்கிறது என்று சொல்லுறார். மேலும் பாக்கியாவப் பாத்து மாப்பிள்ளையும் இனியாவும் சாப்பிட்டுத் தான் போகப் போறாங்க ரெண்டு பேருக்கும் சமைக்கிறியா என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து எல்லாரும் ஒன்னா இருந்து சந்தோசமா சாப்பிடுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து பாக்கியா சுதாகர் ரெஸ்டாரெண்டுக்கு வந்ததைப் பற்றி வீட்டில இருந்த எல்லாருக்கும் சொல்லுறார். மேலும் தான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்குது என்று கோபமாகச் சொல்லுறார். இதனை அடுத்து சுதாகர் தன்னை ஏமாத்திட்டார் என்று பாக்கியா கோபியைப் பாத்துக் கத்துறார். மேலும் ரொம்பவே கேவலமாக தோத்திட்டேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!