பாலிவுட்டில் தனது கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை மயக்கிய நடிகை சன்னி லியோன், தற்போது ஒரு புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கின்றார். இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் தனது அசைவையும் அழகையும் நிரூபித்துள்ள இவர், தற்போது ஹாலிவூட் சினிமாவில் ஹீரோயினாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், சன்னி லியோன் ஒரு சுயாதீன திரைப்படம் மூலம் ஹாலிவூட்டில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் சன்னி லியோன் மிகவும் அழுத்தமான மற்றும் உணர்ச்சிவசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றார். இதுவரை பளீச்சென்ற கவர்ச்சிப் போஸில் நடித்த சன்னி, இந்த போஸ்டரில் புதிய பரிமாணத்துடன், மிக சீரியஸ் முகபாவனையில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டுகின்றார்.
கனடாவில் பிறந்து வளர்ந்த சன்னி லியோன், இந்திய சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு "ஜிஸ்ம் 2" படத்தின் மூலம் பாலிவுட் கதாநாயகியாக களமிறங்கினார். அதிலிருந்து தொடர்ச்சியாகப் பல பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அத்தகைய நடிகையின் இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த ஹாலிவூட் படத்திற்கான தலைப்பு, இயக்குநரின் பெயர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரை வெளியீட்டு திகதிகள் ஆகியவை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!