சுந்தர்சி இயக்கத்தில் குஷ்பு சுந்தர், ஏ. சி. சண்முகம், ஏ. சி. ச. அருண்குமார் தயாரிப்பில் வடிவேலு ,வாணிபோஜன், கத்ரின் தெரேசா நடிப்பில் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாகிய "கேங்கேர்ஸ் " திரைப்படம் வெளியாகி முதல் நாளில் இந்த படம் தமிழக அளவில் சுமார் 60 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வசூலில் பாரிய சரிவை சந்தித்தது.
படம் தியேட்டர் அளவில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் விட்டாலும் வெளியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளமையால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியடைந்துள்ளார். இதன் காரணமாக சுந்தர்சி மற்றும் குஷ்பூவிற்கு பரிசு வழங்கியுள்ளார்.
மேலும் படத்தின் தயாரிப்பாளரான ஏ. சி. சண்முகம் இருவரதும் 25 ஆவது திருமண நாளை முன்னிட்டு யூரோப்பியன் country சுற்றுலா ஒன்றினை ஒழுங்குபடுத்தி கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Listen News!