• Jul 18 2025

இருவரை மாட்டிவிட்டீங்.. ஆனால் விற்றவங்க ஜம்முனு இருக்காங்க..! கேள்வியெழுப்பிய ரஞ்சித்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சமீப காலமாக, திரையுலகில் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரபல நடிகர்கள் மற்றும் பின்னணி தொழிலாளர்கள் மீது மருந்து வாங்குதல், பரிமாறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இந்நிலையில், நடிகர் ரஞ்சித் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து, இதுபற்றிய தனது மனநிலை, கருத்து, கண்டனம் அனைத்தையும் மிக நேர்மையாகப் பகிர்ந்துள்ளார்.


அவர் கூறிய ஒரு சில வரிகளே இன்று இணையத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. “இது மட்டும் போதைன்னா, டாஸ்மாக்கில் என்ன சத்து டானிக்கா வித்துட்டு இருக்காங்க?” எனக் கூறிய அவர், சமூகத்தையே எதிர்பாராத ரீதியில் சிந்திக்கவைக்கும் வகையில் பேசியுள்ளார்.

பொதுவாகவே சமூகக் கொள்கைகள், ஏழைகள் பற்றிய கருத்துகளை நேர்மையாக வெளிப்படுத்தும் நடிகராகவும் அறியப்படுகிறார் ரஞ்சித். சமீபத்திய போதைப்பொருள் விவகாரங்களைப் பார்த்தபோது, அவர் மனதில் எழுந்த வருத்தம், கோபம் அனைத்தும் கூட இந்த பேட்டியில் வெளிப்பட்டது.


அதன்போது, "உண்மையிலேயே இது வருத்தம் தான். இது வாங்கி பயன்படுத்துறவங்கள விட, விற்குறவங்களைப் பார்க்கும் போது தான் இன்னும் வருத்தமாக இருக்கு. ஒரு குடும்பமே இதனால் பாதிக்கப்படுது. ரெண்டு நடிகர்கள் மாட்டினதுனால இப்ப தெரியுது… வித்தவங்க ஜம்முனு இருக்காங்க. இது மட்டும் போதைன்னா, டாஸ்மாக்கில் என்ன சத்து டானிக்கா வித்துட்டு இருக்காங்க? அதுவும் போதைதான்." எனக் கூறினார் ரஞ்சித்.

இந்த உரையின் வீடியோ பகுதி, சில நிமிடங்களில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பரவி, ரஞ்சித்தின் உரைக்கு மக்கள் ஆதரவும் விமர்சனமும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement