• Sep 02 2025

‘அமர்க்களம்’ ஷாலினியாக மாறிய ரச்சிதா! ரீல்ஸ் வீடியோவைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.....

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகை ரச்சிதா மஹாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு புதிய ரீல்ஸுடன் இணையத்தை அதிரவைத்துள்ளார். இந்த ரீல்ஸில், அவர் நடனமாடியிருப்பது ஒரு சாதாரண பாடலுக்கு அல்ல… தமிழ் சினிமா மக்கள் மனதில் பதிந்திருந்த ‘அமர்க்களம்’ படத்தில் உள்ள அற்புதமான பாடலுக்கே!


அஜித் - ஷாலினி அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் பெரும் வரவேற்பை பெற்ற “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...” என தொடங்கும் அந்த பாடலைத் தான் ரச்சிதா தற்போது தனது ரீல்ஸில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்.


இப்படம் மட்டுமின்றி, அதில் இடம் பெற்ற பாடல்கள் கூட காதலர்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்தவை. அந்த வகையில், “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...” பாடல், அஜித்-ஷாலினி காதலை உணர்வுபூர்வமாக வெளிக்கொணரும் ஒரு மென்மையான பாடலாகும். அத்தகைய பாடலுக்கு தற்பொழுது ரச்சிதா ரீல்ஸ் செய்த வீடியோ இன்ஸ்டாவில் வெளியான சில மணிநேரங்களிலேயே அதிகளவான லைக்கினைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement