• Jul 18 2025

ரோகிணியால் கலகலப்பான குடும்பம்! சமயம் பார்த்து பழிவாங்கும் முத்து.! சிறகடிக்க ஆசை புரொமோ!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனங்களைக் கவர்ந்த சீரியல் சிறகடிக்க ஆசை. அந்த சீரியலின் இன்றைய எபிசொட்டில் முத்து குடிச்சிட்டு மீனாவுக்கு கால் எடுத்துக் கதைக்கிறார். மறுநாள் காலையில விஜயா, மீனாவை வீட்டு வேலை செய்யுற ஆள் என்று சொல்லுறதைக் கேட்ட முத்து கோபத்தில் விஜயாவை பேசுறார். 


இவ்வாறாக இன்றைய எபிசொட் பரபரப்பாக இடம்பெறவுள்ள நிலையில் தற்பொழுது இனி ஒளிபரப்பாகவுள்ள எபிசொட்டின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், ரோகிணி வீட்டு வேலை செய்யுறதுக்காக ஒரு பொம்பிளையை கூட்டிக் கொண்டு வாறார். பின் அந்த பொம்பிளை சமைச்ச சாப்பாட்டை வீட்டில இருக்கிற எல்லாரும் சாப்பிட்டு காரம் தாங்க முடியாமல் கத்துறார்கள். 


இதனை அடுத்து விஜயா ரோகிணியை பார்த்து முதலில இவள வீட்டை விட்டு துரத்தி விடு என்கிறார். அதைப் பார்த்த முத்து இப்பதான் என்ர பொண்டாட்டியோட அருமை உங்க எல்லாருக்கும் தெரியுது என்று சொல்லுறார். மேலும் என்ர பொண்டாட்டிய வேலைக்காரி என்று சொன்னாங்க எல்லோ அவள் இல்லன்னா என்ன ஆகும் என்று இப்பயாவது புரியும் என்கிறார். 


Advertisement

Advertisement