• Jul 18 2025

பஞ்சாப்பைக் கலக்கிய சித்து மூஸ்வாலா… மீண்டும் இசையால் உயிர்த்தெழுந்தார்! வைரலான வீடியோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சித்து மூஸ்வாலா (Sidhu Moose Wala), பஞ்சாப் ராப் மற்றும் ஹிப்-ஹாப் இசையில் புரட்சியை ஏற்படுத்திய நபர். சமூக அரசியல் விவகாரங்கள், இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் சமூக இடர்பாடுகளை தைரியமாக பாடல்களில் பதிவு செய்தவர். அவருடைய வீரம், தனித்துவமான குரல், இயற்கையான வரிகள் இவை அனைத்தும் அவரை இசையில் மட்டும் அல்ல, மக்கள் மனதிலும் நிலைத்து நிற்க வைத்தது.


2022 மே 29 அன்று அவரை மர்ம நபர்கள் சூழ்ந்து சுட்டுக் கொன்ற சம்பவம், இந்தியா மட்டுமல்லாமல் உலக ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவரது இசை இறப்புக்குப் பிறகும் உயிருடன் வாழ்கிறது என்பதற்கு சமீபத்திய மூன்று பாடல்கள் சாட்சி.

ஜூன் 11, 2025 சித்து மூஸ்வாலாவின் 32வது பிறந்த நாளன்று அவரது குடும்பத்தினர் மற்றும் இசை குழுவினர் இணைந்து மூன்று புதிய பாடல்களை வெளியிட்டனர். ‘008’ , ‘Take Notes’ , ‘Neal’ இந்த மூன்று பாடல்களும் பரவலாக கேட்கப்பட்டு வருகின்றன. 


வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல்கள் யூடியூபில் மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிவிட்டன. சித்து மூஸ்வாலா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் "Legends never die" போன்ற ஹாஷ்டாக்குகளை  பதிவு செய்யத் தொடங்கினர். பலரும் அவரது பாடல்களைக் கேட்டு கண்ணீர் விட்டதாக பதிவிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement