• Apr 26 2025

பிரேம்ஜியும் சோனாவும் காதலித்தார்களா..? பரபரப்பை கிளப்பிய சோனாவின் விளக்கம்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளில் இருக்கும் நடிகை சோனா, சமீபத்தில் நடிகர் பிரேம்ஜி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த சோனா தற்பொழுது பிரேம்ஜியின் லவ் குறித்து பரவிய தகவல்களை மறுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் சிலர், "பிரேம்ஜியும் சோனாவும் காதலித்தார்கள், ஆனால் தயாரிப்பாளர் சிவா அவர்களை பிரித்தார்" என்ற வதந்திகளை பரப்பி வந்தனர். இதுகுறித்து சோனா நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். சோனா, பிரேம்ஜி குறித்த வதந்திகளை முற்றிலும் மறுத்து, "அந்த கதைகள் எல்லாம் உண்மையல்ல. எங்களுக்குள் அப்படி எந்த தொடர்பும் இல்லை" என்று கூறினார். 


மேலும், இந்த பேச்சு எங்கிருந்து வந்தது என்பது எனக்கு தெரியவில்லை என்றும், "என்னை வேண்டுமென்றே இவற்றில் இழுக்கிறார்கள்" எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது பிரேம்ஜியைப் பற்றி கூறும்போது  "அவர் ஒரு வயதான குழந்தை மாதிரி!" என்று விளையாட்டாக கூறினார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளன.

மேலும் சோனாவும் பிரேம்ஜியும் பல வருடங்களாக ஒரு நல்ல நட்பில் இருந்தனர். சில நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாகப் பார்த்தவுடனே அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள் என்றார். மேலும் "நாங்கள் நல்ல நண்பர்கள் யாரும் வேறு அர்த்தம் கொள்ள வேண்டாம் " என்று சோனா கூறினார்.


பிரேம்ஜி தற்போது  புதிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இவரைச் சுற்றி ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு சர்ச்சை உருவாகுவது வழக்கமாக உள்ளது. அத்துடன் சோனாவின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement