கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "ரெட்ரோ " திரைப்படம் மே மாதம் முதலாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகியது. படத்தினை ஸ்டோன் பெஞ் கிரியேஷன் மற்றும் சூர்யா ஜோதிகாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளது.
இன்று படத்தின் இசை வெளியீட்டு விழா இடம்பெறுவதுடன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புடன் படம் வெளியாகவுள்ளது. மற்றும் 65 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருவதுடன் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது "ரெட்ரோ " படத்தின் Trailer வீடியோ வெளியாகியுள்ளது. வெளியாகி ஒரு சில மணித்தியாலங்களில் ஐந்து லட்ஷம் பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் அழகாக காணப்படுகின்றது. வீடியோ இதோ...
Listen News!