• Apr 26 2025

நடனத்தில் தீவிரமாக இறங்கிய தமன்னா..! அடுத்த டான்ஸ் எந்தப் படத்தில் தெரியுமா..?

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழித் திரையுலகிலும் முக்கிய நடிகையாக வளர்ந்தவர் தமன்னா பாட்டியா. தனது அழகு மற்றும் நடிப்பு என்பன மூலம் வளர்ச்சியடைந்த தமன்னா சமீப காலமாக தனது முத்திரையை பதிக்கும் விதமாக நடனத்திலும் அசத்தலான வளர்ச்சியைக் காட்டி வருகின்றார்.


2023ம் ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் 'காவாலயா...' என்ற பாடலில் தமன்னா நடனமாடிய விதம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே வைரலாகிக் கொண்டது. இதன் மூலம் தமன்னா, ஒரு 'நடன ராணி' என்ற பட்டத்தையும் பெற்றார்.

'காவாலயா...' வெற்றியின் தொடர்ச்சியாக, தமன்னா தற்போது 'ஸ்ட்ரீ 2' என்ற ஹிந்தி படத்திலும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த பாடல் பெயர் 'ஆஜ் கி ராத்...'ஆகும். இந்த பாடல் ரசிகர்களிடையே வெளியான சில நாட்களிலேயே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் திரையுலகில் பரவி வருகின்றது. அது என்னவென்றால், தமன்னா, அடுத்ததாக 'ரெய்டு 2' திரைப்படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018ம் ஆண்டு வெளியான 'ரெய்டு' திரைப்படம், அஜய் தேவ்கன் நடித்த ஒரு திரில்லர் திரைப்படமாக இருந்தது.

அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்கள் 'ரெய்டு 2' குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.  'ரெய்டு 2' படம் மே 1ம் திகதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'ரெய்டு 2' படத்தில் ஒரு சிறப்பு பாடல் உள்ளதாகவும் அந்த பாடலில் தமன்னா பிரமாண்டமான நடன அசைவுகளுடன் களமிறங்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement