தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் சிறந்த நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த திரையுலகமே அவரை "உண்மையான நடிகை" என்ற பட்டத்தோடு நேசித்திருந்தது.
இவரது நடிப்பின் நெருக்கமும், உணர்வுகளின் வெளிப்பாடும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. அத்தகைய லட்சுமியின் திரை வாழ்க்கை மட்டுமல்ல… அவரது உண்மையான வாழ்க்கையும் கசப்பும், காதலும், விடாமுயற்சியுமாகவே இருந்தது.
லட்சுமி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிறந்ததிலிருந்தே சினிமா சூழலில் வளர்ந்தவர். குமாரி லட்சுமி என்ற முன்னணி நடிகையின் மகளாகப் பிறந்து திரைத்துறையில் பல சாதனைகள் புரிந்திருந்தார்.
தனது சிறந்த நடிப்புத் திறமையால், பல வெற்றிப் படங்களில் நடித்து தனது பெயரை தக்கவைத்திருந்தார் லட்சுமி. இளம்வயதிலேயே, லட்சுமி சேலத்தைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ஒரு அழகான காதல் திருமணம். திருமணத்திற்கு பின்னர், அவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை பிறந்தார். இந்தக் குழந்தை பிறந்ததோடு, கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகி, மெல்ல பிரிவில் முடிந்தது.
தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய முடிவை எடுத்த லட்சுமியின் திருமண வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்தது. இந்த முடிவுக்குப் பிறகு, மகள் ஐஸ்வர்யாவை தனது கரத்தில் வைத்து வளர்த்தார் லட்சுமி. அவர் ஒரு தனி தாயாக மகளுக்கு உயிராக வாழ்ந்தார்.
பின்னர், லட்சுமியின் வாழ்க்கையில் வந்தவர் தான் மலையாள நடிகர் மோகன் ஷர்மா. இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஏற்பட்ட நட்பு, மெல்ல காதலாக மாறியது. மோகன் ஷர்மா ஒரு நேர்காணலில், “நான் சினிமாவில் இருந்த காலத்தில் பல நடிகைகள் என்னை திருமணம் செய்ய விரும்பினார்கள். ஆனாலும் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. லட்சுமியை மட்டுமே மனஉறுதியுடன் விரும்பினேன். ஆனால் இந்த காதலை குடும்பத்தில் சொன்ன போது பல எதிர்ப்புகள் வந்தன. அதைத் தாண்டி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.” என்று கூறியிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு, புது வாழ்க்கை இனிமையாக இருக்குமென மோகன் எதிர்பார்த்த நிலையில், தினமும் சண்டைகள், கருத்து முரண்பாடுகள் என வாழ்க்கை சிக்கலாகிவிட்டது. மோகன் ஷர்மா இதை ஒப்புக்கொண்டு, “தினமும் சண்டை வந்தது உண்மைதான். ஆனாலும் அதை நான் பொறுத்துக் கொண்டேன். இறுதியில், பிரிவுதான் ஒரே தீர்வாக இருக்க முடிந்தது.” என்றார்.
இவர்கள் இருவரும் சமாதானமாகப் பிரிந்தனர். ஆனால் அந்த பிரிவின் பின், மோகன் ஷர்மா கூறிய ஒரு வரி, பலரின் மனதையும் புண்ணாக்கியது. பிரிவின் பின் மோகன், “லட்சுமியை பிரிந்த பிறகு தான் நான் ஒரு மனிதராக உணர்ந்தேன்.” என்று மிகவும் உணர்வு பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக நடிகை லட்சுமியின் வாழ்க்கையில் காதல், கண்ணீர் என்பன கலந்து காணப்பட்டிருந்தது. இந்த தகவலைப் பார்த்த ரசிகர்கள் ஓர் நடிகையின் வாழ்க்கையில் இப்படியான கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதா..? எனப் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
Listen News!