• Jul 18 2025

ரிலீஸுக்கு தயாரான ‘தலைவன் தலைவி’.! வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிறப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’.


இந்தக் காமெடி கலந்த நவீன காதல் படத்துக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது படக்குழு அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, ‘தலைவன் தலைவி’ படம் 2025 ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


"இந்த ஜோடியின் கேமிஸ்ட்ரியை திரையில் காண தயாராகுங்கள். "தலைவன் தலைவி" உங்களைக் கவர ஜூலை 25 வருகிறது." என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படம், விஜய் சேதுபதியின் ‘96’, ‘நானும் ரவுடி தான்’ போல் ரசிகர்களின் மனங்களை நெகிழ வைக்கும் வகையில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியாகிய பிறகு, சமூகவலைத்தளங்களில் #ThalaivanThalaiviOnJuly25 #VijaySethupathi #NithyaMenen போன்ற ஹாஷ்டாக்குகள் டிரெண்டாகி வருகின்றன.


Advertisement

Advertisement