• Apr 28 2025

சின்னத்திரை நடிகைகள் இருவரும் மாறி மாறி தாலி கட்டுறாங்க..!இது என்னடாப்பா புதுசா இருக்கே..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் கடந்த சில மாதங்களாக திருமண விழாக்கள் செறிவாக நடைபெற்று வருகின்றன. பிரபலங்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுத்து புதிய வாழ்க்கைத் தொடக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, விஜய் டீவியில் ஒளிபரப்பான 'விக்ரம் வேதா' தொடர் மற்றும் சன் டீவியின் 'மலர்' போன்ற சீரியல்களில் நடித்த மலையாள நடிகை அஸ்வதி அக்னிஹோத்ரியும் இவருடன் இணைந்து இன்னொரு பெண்ணும் மணக்கோலத்தில் தோன்றும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது.


அந்த வீடியோவில், அஸ்வதி அக்னிஹோத்ரி மற்றொரு சீரியல் நடிகைக்குத் தாலி கட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இருவரும் புன்னகையுடன் தாலி கட்டிக்கொண்டு, கல்யாண கோலத்தில் பளிச்சென்று மிளிரும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். தாலி கட்டிய பின் இருவரும் ஒருவருக்கொருவர் ஆசீர்வாதம் பெறுவது போன்ற அந்த வீடியோ அனைவரையும் உணர்வு பூர்வமாக மாற்றியுள்ளது.


இந்த வீடியோ வெளியாகியதும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளும் எழுந்தன. தற்போது இதற்கான தெளிவான தகவல் வெளியாகவில்லை. இது ஒரு விளம்பர படப்பிடிப்பாக இருக்கலாம் என்றும், அல்லது சமூகவிழிப்புணர்விற்காக இயக்கப்பட்ட சிறப்பு வீடியோவாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement